Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 19 ஏப்ரல் (ஹி.ச.)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக கூறி, அவர்மீது எப்.ஐ.ஆர்.
பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி விக்னேஷ் சிஷிர், ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரி அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கீழ்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ராகுல்காந்தி தரப்பின் வாதங்களையும் கேட்க வேண்டியிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 20-ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.
பதிவு செய்யும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் மூலம் ராகுல்காந்திக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA