குடவாசலில் அதிமுக வேட்பாளர் காமராஜுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் பிரசாரம் – ஸ்டாலின் மீது கடும் குற்றச்சாட்டு
சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.) குடவாசல் (நன்னிலம்) பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தட்டில் இருந்து இரண்டு பருக்கை சோறு சிந்தினாலும் அதை எடுத்து ச
Anb


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)

குடவாசல் (நன்னிலம்) பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து, அன்புமணி ராமதாஸ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

தட்டில் இருந்து இரண்டு பருக்கை சோறு சிந்தினாலும் அதை எடுத்து சாப்பிடும் பழக்கம் எனக்கு உள்ளது.

ஆனால் 5 லட்சம் டன் நெல்லை முளைக்கவைத்து நாசப்படுத்தியவர் மு.க. ஸ்டாலின். நாம் சாப்பிடும் சோற்றையே நாசப்படுத்தியவராக அவர் உள்ளார். கேட்டால் தன்னை டெல்டா காரன் என்கிறார்.

நெல் ஒரு குவிண்டாலுக்கு ₹2500 கொடுப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அதில் ₹2369 மத்திய அரசு வழங்குகிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே பெரும்பங்கு தருகிறது. மாநில அரசு வெறும் ₹131 ஊக்கத்தொகையாக மட்டுமே வழங்குகிறது, என குற்றம்சாட்டினார்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் 37 சட்டமன்ற தொகுதிகளில் 33 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு 3280 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதைத் தவிர டெல்டா பகுதிக்கு திமுக அரசு பெரிய சாதனைகள் எதுவும் செய்யவில்லை, என்றும் அவர் கூறினார்.

இந்த பிரசாரம் அப்பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ