Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 19 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அவர்களின் உடல்நிலை குறித்து பிரதமர் தநரேந்திர ஒரு லைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார்.
சனிக்கிழமை அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட பவன் கல்யாணிடம் பிரதமர் மோடி பேசிக் கொண்டு, அவரது உடல்நிலையை கேட்டறிந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில்,
பவன் கல்யாண் அவர்களுடன் பேசி, அவரது உடல்நிலையை கேட்டறிந்தேன். அவர் மிகுந்த தைரியமானவர்விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்.
அவரின் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பவன் கல்யாண் திடீரென உடல்நலக் குறைவு அடைந்தார்.
இதையடுத்து, அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனை ஜூப்ளி ஹில்ஸ் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எம்.ஆர்.ஐ. உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், அறுவை சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதன்பேரில், சனிக்கிழமை மாலை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் 7 முதல் 10 நாட்கள் வரை ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA