பெண்கள் இடஒதுக்கீடு விவகாரம் -மோடி நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார் ஒய் எஸ் ஷர்மிளா
அமராவதி , 18 ஏப்ரல் (ஹி.ச.) பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நிலைப்பாட்டை ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ். ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: மகளிர் இடஒதுக்க
A


அமராவதி , 18 ஏப்ரல் (ஹி.ச.)

பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நிலைப்பாட்டை ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஓய்.எஸ். ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்தில் பிரதமர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல், அதை தொகுதி மறுவரையறை (டெலிமிடேஷன்) செயல்முறையுடன் இணைப்பது தவறானது என்றும், இது அரசியல் சதி எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “நாரி சக்தி வந்தன் சட்டம்–2023” உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளிலேயே மகளிர் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தொகுதி மறுவரையறை அறிவியல் முறையில் நடைபெற வேண்டும் என்றும், முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

2029 தேர்தலுக்கு முன்பாக இந்த முழு செயல்முறையையும் நிறைவேற்ற வேண்டும் எனவும்,

இல்லையெனில் எதிர்க்கட்சிகள் மக்கள் முன் உண்மையை வெளிப்படுத்தும் என்றும் ஷர்மிளா எச்சரித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA