வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
கோவை, 19 ஏப்ரல் (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணை வலது கரை பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 85 வயதுடைய மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை அருகே வசித்து வந்த இன்னாசி அம்மாள் (85), மறைந்த அந்தோணிசா
சிறுத்தை


கோவை, 19 ஏப்ரல் (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சோலையார் அணை வலது கரை பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 85 வயதுடைய மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே வசித்து வந்த இன்னாசி அம்மாள் (85), மறைந்த அந்தோணிசாமியின் மனைவி. நேற்று வீட்டின் அருகில் இருந்த போது திடீரென சிறுத்தை தாக்கி அவரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மாலை 5 மணி முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை சோலையார் அணை பகுதியில் உள்ள முட்புதர்களில் தேடுதல் மேற்கொண்ட போது, சிறுத்தை தாக்கிய நிலையில் இன்னாசி அம்மாளின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

உடலின் பெரும்பகுதி காணாமல் போயிருந்ததாகவும், கால்கள் மட்டும் மீதமிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P