சென்னை டிஜிபி அலுவலகம் அருகே ஆடி கார் விபத்து – பல வாகனங்கள் சேதம்
சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச) சென்னை டிஜிபி அலுவலகம் அருகே இன்று ஆடி சொகுசு கார் தொடர்பான விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. டிஜிபி அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆடி கார், திடீரென குறுக்கே வந்த ஆட்டோவை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததா
Var


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை டிஜிபி அலுவலகம் அருகே இன்று ஆடி சொகுசு கார் தொடர்பான விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஜிபி அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆடி கார், திடீரென குறுக்கே வந்த ஆட்டோவை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், அந்த கார் குறுக்கே வந்த ஆட்டோவும், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களையும் சரமாரியாக மோதியது.

இந்த விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, சம்பவ நேரத்தில் பொதுமக்கள் அல்லது வாகனங்களில் யாரும் இல்லாததால் பெரிய அளவில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை.

சம்பவத்துக்குப் பிறகு போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ