உலகத் தர சென்னைக்கு ‘சூப்பர்-6’ - 6 பெரிய வளர்ச்சி திட்டங்களை வாக்குறுதிகளாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.) சென்னையை உலகத் தர நகரமாக மாற்றும் நோக்கில், நகரின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சென்னை சூப்பர்-6’ திட்டங்களை
M K Stalin


Hhh


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னையை உலகத் தர நகரமாக மாற்றும் நோக்கில், நகரின் அடிப்படை வசதிகள், போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘சென்னை சூப்பர்-6’ திட்டங்களை அறிவித்துள்ளார்.

மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, நகரின் எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் இந்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் இடம்பெற்றுள்ள 6 முக்கிய அம்சங்கள் வரிசையாகப் பின்வருமாறு:

1. மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்

நகர்ப்புற குடியிருப்புகளில் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டு, அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

2. உலகத் தர பண்பாட்டு மையம்

கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென சர்வதேச தரத்தில் தனித்துவமான பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

3. சிறப்பான போக்குவரத்து திட்டம்

மெட்ரோ, ரயில், பேருந்து சேவைகளுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு, AI தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்.

4. உட்கட்டமைப்பு மேம்பாடு

எல்லைச் சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள், மெட்ரோ விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் 2028க்குள், சாலை மற்றும் நடைபாதை மேம்பாடுகள் 2029க்குள் நிறைவு செய்யப்படும்.

5. தெருநாய் பிரச்சனைக்கு மனிதாபிமான தீர்வு

ABC திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதுடன், நாய்களுக்கான காப்பகங்கள் உருவாக்கப்படும்.

6. உலகளாவிய தொழில்நுட்ப மையம்

ரூ.10,000 கோடி முதலீட்டில் AI, அனிமேஷன், கேமிங் துறைகளுக்கான மையம் அமைக்கப்பட்டு, 20,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சென்னையின் முழுமையான முன்னேற்றத்திற்கான முக்கியக் கட்டமாக இந்த ‘சூப்பர்-6’ திட்டங்கள் பார்க்கப்படுகின்றன

Hindusthan Samachar / P YUVARAJ