Enter your Email Address to subscribe to our newsletters

உஜ்ஜயினி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான அட்சய திருதியை நாளில் மேற்கொள்ளும் செயல்கள் செழிப்பு, வெற்றி மற்றும் நல்வாழ்வை தரும் என்பது நம்பிக்கை. புதிய முயற்சிகளை தொடங்கவும், முதலீடு செய்யவும், தங்கம் மற்றும் சொத்துகளை வாங்கவும் இது உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
பிரார்த்தனை, தானம் மற்றும் ஆன்மிக செயல்பாடுகளுடன் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
‘அட்சய’ என்ற சொல்லுக்கு என்றும் குறையாதது என்று பொருள். இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் நிலையான பலனைத் தரும் என்பது மரபு நம்பிக்கை.
பக்தர்கள் பிரார்த்தனை, தான தர்மம் மற்றும் பிற ஆன்மிக செயல்களில் ஈடுபட்டு, நிலையான செழிப்பு மற்றும் வளர்ச்சியை குறிக்கும் வகையில் இந்நாளை கடைப்பிடிக்கின்றனர்.
அந்த வகையில் அட்சய திருதியையை முன்னிட்டு இன்று உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆரத்தியை தரிசித்து வழிபாடு செய்தனர்.
அதே நேரத்தில், அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயிலிலும் ராம் லல்லாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கூடினர்.
இதன் மூலம் முக்கிய புண்ணிய தலங்களில் இந்த நாள் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b