எடப்பாடியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு – விஜய் அறிவிப்பு
சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு
Jj


சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கூ. பிரேம்குமாருக்கு தமிழக வெற்றிக் கழகம் முழு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எடப்பாடி தொகுதி மக்களுக்கு வணக்கம் தெரிவித்து, பிரேம்குமார் முன்பு தமிழக வெற்றிக் கழக ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாக செயல்பட்டவர் என்றும், தங்களுடைய சகோதரர் போன்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள அவருக்கு, கழகத்தின் சார்பில் ஒருமனதாக ஆதரவு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வரிசை எண்

12-இல் உள்ள ‘தொலைக்காட்சிப் பெட்டி’ சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பிரேம்குமாரை தங்களுடைய வேட்பாளராகக் கருதி, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் எடப்பாடி தொகுதி மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி குறுக்கு வழியில் வெற்றி பெற முயன்றவர்களுக்கு உரிய பதிலாக இந்த வெற்றி அமைய வேண்டும் என்றும் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ