எலப்பாக்கம் பாலமுருகன் திருக்கோவிலில் 66-ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி திருவிழா
செங்கல்பட்டு, 19 ஏப்ரல் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 66-ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. சித்திரை க
முருகன்


செங்கல்பட்டு, 19 ஏப்ரல் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் 66-ஆம் ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சித்திரை கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சந்தன அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, வேல் காவடி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

குறிப்பாக அழகுபட்டி பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam