Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 19 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மொத்தம் 294 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் 23-ந்தேதி 152 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 29-ந்தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஊடுருவல்காரர்களை ஆதரித்து மேற்கு வங்காளத்தின் மொழி மற்றும் கலாசாரத்தை மாற்ற திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி செய்கிறது.
மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு பழங்குடியின மக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சந்தாலி மொழியும், பழங்குடியின அடையாளமும் அவமதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மதராசா பள்ளிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA