Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மூன்றாவது முறையாக போட்டியிடும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அவர், அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்தவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.
மேலும், அப்பகுதி மக்கள் முன்வைத்த குறைகளை கவனமாக கேட்டறிந்த அவர், இந்த முறை வெற்றி பெற்று வந்த பின் அவற்றை நிச்சயமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பு பணியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடன் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆதரவு திரட்டினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam