கோடை விடுமுறை - பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு
திண்டுக்கல், 19 ஏப்ரல் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று கார்த்திகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை , முழு ஆண்டு தேர்வு விடுமுற
Palani Murugan Temple


திண்டுக்கல், 19 ஏப்ரல் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் இன்று கார்த்திகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை , முழு ஆண்டு தேர்வு விடுமுறை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் இரண்டும் மணி நேரம் வரையும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் , சாதாரண தரிசனம் கட்டண தரிசனம் என மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய முன்று மணி நேரம் வரையும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும் , படிப்பாதை வழியாக கீழே இறங்கி வர கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருத்திகை தினம் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்திட ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN