Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் நாளை அண்ணாநகர், வில்லிவாக்கம் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அண்ணாநகர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த பின்னர், கும்மிடிப்பூண்டிக்கு சென்று திறந்த வெளி வாகனத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
அதன் பின்னர் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வழியாக தனது இல்லத்திற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
முதலில் பெரம்பூரிலும் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதே பகுதியில் முதலமைச்சரும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், விஜய் தனது பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
இதற்குப் பதிலாக, பெரம்பூர் பகுதியில் தொண்டர்களுக்கு கை அசைத்து வணக்கம் தெரிவித்து செல்லும் வகையில் திட்டமிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam