Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 19 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜி என்பவர் ஜோசியம் பார்த்து வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜோசியம் பார்ப்பது வழக்கம். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் தங்கி ஜோசியம் பார்த்து வந்த நிலையில் இன்று ராஜி தனது இருசக்கர வாகனத்தில் கொத்தாம்பாடி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஜோசியர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam