கட்டுமானத் தொழிலாளர்களின் துயரம் துடைக்கப்படும் – பெண் கட்டுமானம் தொழிலாளியை ஆரத்தழுவி வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணி
தருமபுரி, 19 ஏப்ரல் (ஹி.ச.) தருமபுரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி இன்று தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.கொள்ளஅல்லி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் வீடு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த
சௌமியா அன்புமணி


தருமபுரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

தருமபுரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி இன்று தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.கொள்ளஅல்லி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பகுதியில் வீடு கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தைக் கண்டதும், தனது பிரச்சார வாகனத்தை நிறுத்தி அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பணியில் ஈடுபட்டிருந்த பெண் கட்டுமானத் தொழிலாளி ஒருவரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய வேட்பாளர் சௌமியா அன்புமணி, வரும் சட்டமன்றத் தேர்தலில் மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு தருமாறு உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.

அப்போது அங்கிருந்த சில கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது சமூக அவலத்தை வேட்பாளரிடம் எடுத்துரைத்தனர்.

நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்களுக்குப் பெண் கொடுக்க பல குடும்பங்கள் மறுக்கின்றன.

இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது

என்று கண்கலங்கினர்.

தொழிலாளர்களின் குறைகளைப் பொறுமையுடன் கேட்டறிந்த முனைவர் சௌமியா அன்புமணி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

தமிழகத்தில் தற்போது விவசாயிகளுக்கும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பெண் கொடுக்கத் தயங்கும் ஒரு சமூகப் பிற்போக்குத்தனம் நிலவுகிறது என்பதை நான் அறிவேன்.

உங்களின் உழைப்பும், நேர்மையும் தான் இந்த சமூகத்தைக் கட்டமைக்கிறது. உங்களுக்கான அங்கீகாரமும், கௌரவமும் கிடைக்க நாங்கள் பாடுபடுவோம்.

விரைவில் இந்த நிலைமை மாறும் என உறுதிபடத் தெரிவித்தார்.

வேட்பாளரின் இந்த நேரடி சந்திப்பும், கனிவான பேச்சும் கட்டுமானத் தொழிலாளர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam