Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்தி உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்புரம் போலீஸ் நிலைய எல்லைக்குள் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ராஜகோபாலபுரம் பகுதியில் சிவந்திபட்டி சாலை வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பிரபல கேஏஜி டைல்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்யும் தர்மராஜ் மகன் கேசவராஜ் என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
அவரிடம் சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 700 பணத்தை அவர் கொண்டு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து துர்கா தேவி தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அந்த ரொக்கப் பணத்தை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தகுந்த ஆவணங்களை காட்டிவிட்டு மேல்முறையீடு செய்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என கேசவராஜிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Hindusthan Samachar / ANANDHAN