உதயநிதி முதலமைச்சர் வேட்பாளரா? மக்கள் ஏற்க மாட்டார்கள் - பியூஷ் கோயல்
நீலகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் த
Piyush Goyal


நீலகிரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதற்காக, ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்த அவர், பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாடு கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதி ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஸ்டாலின் தலைமையிலான குடும்ப ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. இளைஞர்கள் அரசு வேலைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும், இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை தரும்.

தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது.

உதகை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மக்கள் இந்த முறை மாற்றத்திற்கான உறுதியான தீர்மானம் எடுத்துள்ளனர்.

பிரதமர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர் போஜராஜன்.

அவர் வெற்றி பெற்றால், நீலகிரி மாவட்டம் குறிப்பாக, உதகை பகுதியில் சுற்றுலாத்துறை, சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.

தேயிலை விவசாயிகளுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படும்.

பொது வாழ்வில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத சுத்தமான மனிதர்கள் அரசியலில் வர வேண்டும். அப்படிப்பட்டவர்கள் வந்தால் அரசியல் சுத்தமாகும்.

அந்த வகையில், போஜராஜ் ஒரு நேர்மையான, அர்ப்பணிப்புள்ள தலைவர். மக்கள் நம்பிக்கையை பெற்றவர்.

மலை மாவட்டமான நீலகிரியில் இருந்து தொடங்கும் இந்த வெற்றி அலை தமிழ்நாடு எங்கும் பரவி, பாஜக, அதிமுக கூட்டணிக்கு வரலாற்றுச் சாதனை வெற்றியைத் தரும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின அமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN