புனித அந்தோணியார் தேவாலயத்தில் தவெக தலைவர் விஜய் வழிபாடு
திருச்சி , 19 ஏப்ரல் (ஹி.ச.) நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
TVK Leader Vijay


திருச்சி , 19 ஏப்ரல் (ஹி.ச.)

நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தி வரும் தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.

தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார்.

அந்தவகையில் தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் விசில் ஊதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திறந்த வாகனத்தில் நின்றபடி ரோட் ஷோ சென்ற விஜய்க்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தலுக்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையில் விஜய் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில் தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜயை பார்க்க தடுப்புகளை மீறிய இளைஞர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது.

தேர்தல் பரப்புரைக்கு முன்னதாக விஜய் திருச்சி புனித அந்தோணியார் தேவாலயத்தில் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Hindusthan Samachar / vidya.b