Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் இன்று ரோடு ஷோ – தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் (ஏப்ரல் 23) நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் இன்று (19.04.2026) பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தென் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அவர் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
பணகுடி பகுதியில் டி.டி.டி.ஏ பள்ளி அருகில் இருந்து ராமலிங்க சுவாமி கோயில் வரை சுமார் 400 மீட்டர் தூரம் ரோடு ஷோ நடைபெறுகிறது.
தமிழகத்தில் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் மேற்கொள்வது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் சூழ்நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P