இறுதிகட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம் - வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த சீமான்...!
காரைக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அழகப்பா அருங்காட்சியகத் திடல் வளாகத்தில் அதிகாலை நேரத்தில் சீமான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வழக்கம்போல் பயிற்சி மேற்கொண்டு வந்த விளையாட்டு வீரர்கள், வீர
சீமான்


காரைக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அழகப்பா அருங்காட்சியகத் திடல் வளாகத்தில் அதிகாலை நேரத்தில் சீமான் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வழக்கம்போல் பயிற்சி மேற்கொண்டு வந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் அவரைக் கண்டு உற்சாகமடைந்தனர்.

இதையடுத்து பலர் அவரைச் சுற்றி நின்று சந்தித்து பேசினர். பொதுமக்களுடன் நேரடியாக உரையாடிய சீமான், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தனது கட்சிக்கான ஆதரவை கோரி வாக்கு சேகரித்தார்.

மேலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் அவர் அரசியல், சமூக பிரச்சினைகள் குறித்து சுருக்கமாக கருத்துக்களையும் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

அங்கு இருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சீமானுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

சிலர் அவருடன் நேரடியாக பேசும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நடைப்பயிற்சியுடன் தொடங்கிய இந்த சந்திப்பு, பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்பை உருவாக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P