Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஏப்ரல் (ஹி.ச.)
எண்ணெய் நிறுவனங்கள் தினசரி எரிபொருள் விலையை சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி, இன்று (ஏப்ரல் 19) வெளியிடப்பட்ட புதிய விலைப்பட்டியலின்படி,
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஎன்ஜி (CNG) காஸ் விலை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கங்களும், இந்திய ரூபாய் – அமெரிக்க டாலர் மாற்று விகிதமும் எரிபொருள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால் தினசரி விலை மாற்றம் நடைமுறையில் உள்ளது.
எரிபொருள் விலை உயர்வு பொதுமக்களின் தினசரி செலவினங்களிலும், போக்குவரத்து கட்டணங்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், விலை நிலவரம் குறித்து மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P