திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.4.25 லட்சம் மதிப்பிலான 8.5 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி, 19 ஏப்ரல் (ஹி.ச.) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பறக்கும் படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது திருந
Ganja Seized


திருச்சி, 19 ஏப்ரல் (ஹி.ச.)

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பறக்கும் படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது திருநெல்வேலி விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த ஒரு மூட்டை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.

அந்த மூட்டையை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தபோது, அதற்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், மொத்தம் 8.5 கிலோ அளவிலான கஞ்சா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தேர்தல் காலத்தில் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

இந்த கஞ்சா யாரால் கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது போன்ற விவரங்களை கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்களில் மற்றும் ரயில்நிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு இடமளிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN