Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 19 ஏப்ரல் (ஹி.ச)
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், மனைவி சங்கீதாவிற்கு விவாகரத்து அளிக்க தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் - சங்கீதா பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையில் இருந்து வந்த இரு தரப்பு நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி செட்டில்மெண்ட் தர வேண்டும் என விஜயிடம் சங்கீதா கேட்டுள்ளார்.
வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் செட்டில்மெண்ட் தர வேண்டும் என்று சங்கீதா கேட்டுள்ளார்.
தன்னோடு சேர்த்து மகன், மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் அவர் கேட்டுள்ளார்.
மனைவி சங்கீதாவுக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் அளிக்க விஜய் ஒத்துக்கொண்டதாகவும், மகன், மகளை தான் பார்த்து கொள்வதாக விஜய் ஒத்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
நாளை விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் நேற்று இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam