திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் இன்று பிரச்சாரம்
தமிழ்நாடு, 19 ஏப்ரல் (ஹி.ச.) திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே பல மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அவர், மீண்டும் திருச்சியில் பிரச்சாரத்தை தீவிரப்ப
விஜய்


தமிழ்நாடு, 19 ஏப்ரல் (ஹி.ச.)

திருச்சி கிழக்கு தொகுதியில்

த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

ஏற்கனவே பல மாவட்டங்களில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அவர், மீண்டும் திருச்சியில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகிறார்.

விஜய், இந்த தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவதால், இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

பிரச்சாரத்தின் போது திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோர உள்ளார்.

அவரது வருகையையொட்டி திருச்சி கிழக்கு பகுதியில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தேர்தலை முன்னிட்டு தவெக தரப்பில் வீடு தோறும் பிரச்சாரம், பிரசுரங்கள் விநியோகம் உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தேர்தல் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam