Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 19 ஏப்ரல் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலம் வங்குராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அவர், TMC குண்டர்களுக்கு இது கடைசி வாய்ப்பு.
உடனே காவல் துறையிடம் சரணடையுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாரும் தப்பிக்க முடியாது.
சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் நாளில் வாக்காளர்களை அச்சுறுத்த முயற்சிகள் இருக்கலாம் என கூறிய அவர், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது திரவுபதி முர்முவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசும், பழங்குடியினருக்கு எதிரான காங்கிரசும் வேட்பாளரை நிறுத்தியதாகவும் இப்போது மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை தோற்கடிக்க செய்து பெண் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த தாகவும் குற்றம் சாட்டினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P