வி.சுகுணாம்மாள் மெட்ரி பள்ளியில் 13வது ஆண்டு விழா
திருவள்ளூர், 02 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் வெங்கலில் அமைந்துள்ள வி.சுகுணாம்மாள் மெட்ரிக் தனியார் பள்ளியில் 13-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அப்பள்ளி மாணவர்கள் கலை நயத்துடன் நடனமாடினர். மேலும் விளையாட்டு போட்டி
13th Annual Day Celebration at V. Sugunammal Matriculation School


திருவள்ளூர், 02 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் வெங்கலில் அமைந்துள்ள வி.சுகுணாம்மாள் மெட்ரிக் தனியார் பள்ளியில் 13-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் அப்பள்ளி மாணவர்கள் கலை நயத்துடன் நடனமாடினர்.

மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள்,

இன்றைய தினம் வி.சுகுணாம்மாள் மெட்ரி பள்ளியில் 13-வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சின்னத்திரை நடிகை தீபா பரநாட்டியம் வகுப்புகள் எடுக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து கிராமிய நடன வகுப்புகளுக்கு நடன உதவியாளர் ராகுல் என்பவரின் மேற் பார்வையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கராத்தே பயிற்சி வழங்க மாஸ்டர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடைபெறவுள்ளன. அத்துடன் ஏஐ பயிற்சி வகுப்புகளும் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளி முதல்வர் சரண்யா, பள்ளிப் பொறுப்பாளர் புகழேந்தி, ஆசிரியர் கலை உள்ளிட்ட அணைத்து ஆசியர்களும் இணைந்து கோடை கால சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

கோடை காலத்தில் குழந்தைகளை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள இது போன்ற சிறப்பு வகுப்புகளில் சேர்த்து அவர்களது கற்றல் திறன் மேம்பாட்டு அடைய பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினர்.

இந்நிகழ்வில்,பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b