தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறையில் மக்கள் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்யவுள்ளனர். சென்னையில் இரு
தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறையில் மக்கள் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்யவுள்ளனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.17,021, கோவைக்கு ரூ.16,496, மதுரைக்கு ரூ.13,147 விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டண உயர்வுகள் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் மிகவும் அதிகமாகவும், சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு ஓரளவு குறைவாகவும் உள்ளன.

விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் 40 சதவீதம் எரிபொருளுக்கே செலவிடப்படுவதால், வரும் கோடை விடு முறை காலத்தில் விமான டிக்கெட் விலை 30 முதல் 50 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.

இந்த விலையேற்றம் விமான நிறுவனங்களுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். ஐ.சி.ஆர்.ஏ. அறிக்கையின்படி, 2026 நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.18 ஆயிரம் கோடியாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b