சென்னையில் திமுக துண்டு, ஆரத்தி எடுப்பதற்கு தட்டு, முதல்வர் படம் பதித்த பேட்ச் ஆகியவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) சென்னை தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுல்லா சாலையில் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் திமுக கருப்பு சிகப்பு கோடு போட்ட துண்
Dmk


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசுல்லா சாலையில் இன்று அதிகாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

சோதனையில் திமுக கருப்பு சிகப்பு கோடு போட்ட துண்டு 30, ஆரத்தி எடுப்பதற்காக தட்டு 29, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படம் போட்ட DMK பேட்ச் 26, உதயசூரியன் படம் போட்ட தோரணம் கட்டுவதற்கு கொடி 60, தேங்காய் -30,சணல் பண்டல் இருந்தது தெரிந்தது.

இன்று திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை, 5 விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. ஆனால் தேர்தல் அதிகாரி அனுமதி கடிதம் இல்லை என தெரிந்தது.

இதனை கொண்டு சென்ற திமுக சைதாப்பேட்டை பகுதி இளைஞர் துணை அமைப்பாளர் குணா, வர்த்தக அணி பகுதி துணை அமைப்பாளர் ராஜேஷ் மற்றும் சதீஷ்குமாரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஆவணங்களை சமர்ப்பித்து கொண்டு செல்லும்படி கூறி அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ