துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனுத் தாக்கல்
சென்னை, 02 ஏப்ரல் ( ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4
Deputy Chief Minister Udhayanidhi Stalin Files Nomination Papers


சென்னை, 02 ஏப்ரல் ( ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது.

விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சேப்பாக்கம் - திருவில்லிக்கேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களின் படை சூழ ரோடு ஷோ நடத்தினார்.

இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் அவர் தனது வேட்புமனுத் தாக்கல் இன்று (02.04.2026) செய்தார்.

இனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாங்கள் (திமுக) வரலாறு படைப்போம். இந்த முறை நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

எங்கள் தலைவர் இரண்டாவது முறையாகத் தமிழக முதல்வராவார் எனத் தெரிவித்தார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b