சிறுபான்மையின உரிமைகளை குறைக்கும் முயற்சி -கனிமொழி எம்பி கடும் கண்டனம்
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) சிறுபான்மையின சமூகங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் கொ
Kanimozhi


He


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

சிறுபான்மையின சமூகங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருவதாக திமுக எம்பி கனிமொழி கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த நடவடிக்கை நியாயமற்றதோடு, சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு அனைத்து மதங்களுக்கும் சம உரிமையை உறுதியளிக்கிறது என்பதையும், அந்த அடிப்படை உரிமையை சிதைக்கும் எந்தவொரு முயற்சியையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இந்த சட்டத்திருத்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கனிமொழி கருணாநிதி வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ