Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இராயபுரம் மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடந்தும் அலுவலர் பன்னீர்செல்வடம் ஜெயகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்றயை தினம் அரசியல் கட்சியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இராயபுரம் மண்டல அலுவலகத்திற்கு வருகை புரிந்தன் காரணமாக தடுப்புகள் அமைத்து காவலர்கள் அதிக அளவு பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது,
8 ஆவது முறையாக இராயபுரம் தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எங்களது மறைந்த தலைவர்களின் ஆசி உடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.
எனக்கு இந்த தேர்தல் புதிதல்ல, 1991 ஆம் ஆண்டு முதல் ராயபுரம் தொகுதிக்கு ஜெயலலிதா அவர்கள் என்னை அடையாளம் காட்டினார்.25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல துறைகளில் அமைச்சராக இருந்துள்ளேன். மேலும் 3 முறை மாவட்ட செயலாளர் என அதிமுக கட்சிகளிலும் பல பொறுப்புகளில் என்னை அமர வைத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா அவர்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு சிலர் தான் தொகுதி மாறாமல் போட்டியிட்டு உள்ளனர். அதிலும் சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூட துறைமுகம், அண்ணா நகர், சைதாப்பேட்டை என தொகுதிகள் மாறினார். அவரது மகனும் தொகுதிகள் மாறி உள்ளார். என்றுமே தொகுதி மாறாமல் இருந்துள்ளேன் எனவும் அதனை பெருமைக்குரிய விஷயமாக பார்கிறேன் எனவும் தெரிவித்தார்.
ராயபுரம் மக்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல துன்பங்களை சந்தித்து வந்தனர். மக்கள் பாதிக்கப்படும் போது நேரில் அந்த மக்களை சந்தித்து அவர்களின் ஆறுதல் விசாரிப்பது தான் சட்டமன்ற உறுப்பினர் கடமை ஏன் என்றால் கொரோனா காலத்தில் எனது செயல்பாட்டை ராயபுரம் மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள் மேலும் ராயபுரம் பகுதிகளை குடிசைகளை இல்லாத பகுதிகளாக மாற்றி உள்ளோம். ஆனால் இப்போது சாதாரண மழைக்கே மழை நீர் அதிக அளவு தேங்குகிறது. நிழலின் அருமை வெயிலின் தான் தெரியும் அது போல் கடந்த 5 ஆண்டுகளில் ராயபுரம் மக்கள் அதனை உணர்ந்து உள்ளனர். அதனால் எனக்கு மகத்தான வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என கூறினார்.
ராயபுரம் தொகுதியில் உள்ள எம்சி சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டம் 18 மாதங்களில் முடிய வேண்டியது ஆனால் 3 ஆண்டுகளாக பணிகள் முடியாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.
அதனால் அங்கு வியாபாரம் செய்யும்வியாபாரிகள் விற்பனை இல்லாமல் கடும் சிரமம் அடைவதாக வியாபாரிகள் தன்னை பார்கும் போது தெரிவித்தனர்.
ஐட்ரீம் திரையரங்கம் அருகே ஏசி பேருந்து நிறுத்தம் தேவையா எனவும் அங்கு மட்டும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஏசி பேருந்து நிறுத்தத்தை அமைத்துள்ளனர்.தற்போது அவர் டீரிம்லே (Dreams) சென்று விட்டார் என விமர்சித்தார்.
ராயபுரம் தொகுதியில் தவெக பனையூரில் இருந்தும் திமுக வெளியில் இருந்தும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த மண்ணின் மைந்தனாக நான் களம் இறங்கி உள்ளேன் எனவும் இந்த தொகுதியில் உள்ள 510 தெருக்களையும் நான் முழுமையாக அறிவேன் எனவும் கூறினார்.
அவர்கள் இருவரும் (திமுக, தவெக) லேபிள் தான் மாத்தி உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் தான் என தெரிவித்தார்.
சிறுபான்மையினர் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது என்னவெல்லாம் செய்தேன் என நினைத்து பாரத்துள்ளனர். எனவே இந்த முறை இசுலாமியர் கிறிஸ்துவர் என சிறுபான்மையினர் என மக்கள் அதிமுகவிற்கு வாக்கு அளிப்பார்கள் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ