Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 02 ஏப்ரல் (ஹி.ச.)
2026 தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் களம் இறங்குகிறார்.
ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு, விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அவர் திருச்சி வந்தார். பிறகு அவர் திருச்சியில் ரோடு ஷோ நடத்தினார்.
திடீரென பிரசார வேனின் முன் இருக்கையில் இருந்து எழுந்து வேனில், மேல் நின்று விஜய் கை அசைத்தார்.
தவெக துண்டை விஜய் மீது வீசி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண்ணை விஜய் ஓடிச்சென்று தூக்கினார்.
பெண்ணுக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார். பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விஜய் கீழே குதித்ததை பார்த்து, பதறிப்போன பவுன்சர் வேனில் இருந்து கீழே குதித்து ஓடி வந்தார்.
தொண்டர்களும் ஓடோடி வந்தனர்.
கீழே விழுந்த அப்பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்து விட்டு மீண்டும் தன் பிரச்சார வாகனத்திற்கு திரும்பினார்.
Hindusthan Samachar / vidya.b