Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புனித வெள்ளி வாழ்த்துகளை அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிறிஸ்தவர்களின் வழிபாட்டு ஆண்டில் புனித வெள்ளி மிகவும் முக்கியமான நாளாகும்.
ஏப்ரல் 03ம் தேதி (நாளை) இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை உணர்த்தும் நாளாக, இறைவனின் அன்பை சிந்திக்கும் நாளாக புனித வெள்ளியானது உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் செய்து தவக்கால வழிபாடுகளில் பங்கேற்கின்றனர்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நாளான வெள்ளிக் கிழமையை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி, பெரிய வெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி என பல்வேறு பெயர்களுடன் அனுசரித்து வருகின்றனர்.
குறிப்பாக இயேசு கிறிஸ்து அடைந்த துன்பங்களை நினைவு கூறும் விதமாக இந்நாள் அமைகிறது. இயேசு கிறிஸ்து உயிர் நீத்த தினமானது புனித வெள்ளியாகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த தினமானது ஈஸ்டர் ஞாயிறாகவும் பின்பற்றப்படுகிறது.
இயேசு பிரான் மனித குலத்தை பாவத்தில் இருந்தும், சாவில் இருந்தும் மீட்பதற்காகவும் இறை வாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்.
மேலும் தீமை ஒரு போதும் வெற்றி பெறாது, அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகியவை தான் இறுதியில் வெற்றி பெறும் என்றார் இயேசுபிரான். இயேசுபிரானின் நற்பண்புகளை பின்பற்றி அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையாக பழகி, ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் உறுதுணையாக இருப்போம். இயேசுவின் ஆசீர்வாதத்தை கிறிஸ்தவ பெருமக்கள் பெற்று, வளமுடன், நலமுடன் வாழ தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் புனித வெள்ளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b