முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கௌதம சிகாமணி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு - இன்று தீர்ப்பு
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) 2006 முதல் 2011 வரை ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகுத்த போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடிய
Pon


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

2006 முதல் 2011 வரை ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகுத்த போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவானது.

அந்த வழக்கில்,பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஜெ.ஜெயசந்திரன், கே.ராஜமகேந்திரன், கே.சதாசிவம், ஜி.குமார், கோபிநாத், எம்.லோகநாதன் ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிவானது

இந்த வழக்கின் விசாரணையானது,

16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு அளிக்கின்றார்.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி.

Hindusthan Samachar / P YUVARAJ