அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த மருத்துவமனையில் சளிக்கு பதிலாக நாய்க்கடி மருந்து கொடுத்தார்கள் என்பதனை விளக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆட்டு தொட்டி அருகில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். நெருப்பு மேடு பகுதியில் உள்ள அனைத்து தெர
Masu


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆட்டு தொட்டி அருகில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.

நெருப்பு மேடு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று நேரடியாக பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் பொழுது பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மாமன்ற உறுப்பினர் மோகன் குமார் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சைதாப்பேட்டை வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மூலமாக தென் சென்னையில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவமனையின என பல்வேறு சிறப்பு மிக்க மருத்துவமனைகள் சைதாப்பேட்டை தொகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் பெருவாரியாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என கூறினார்.

தமிழ்நாட்டின் மருத்துவத்துறை குறித்து நேற்று நடந்த பிரச்சாரத்தின் பொழுது எடப்பாடி பழனிச்சாமி பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,

இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்று ஒரு ஆணையத்தை அமைத்தவர் கலைஞர் என்றும் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று திமுக அரசு கொண்டு வந்த அந்த மகத்தான சேவையை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் தற்போது கொண்டு வந்துள்ளதாகவும் உலக அளவில் முன்மாதிரி துறையாக தமிழ்நாட்டின் மருத்துவத்துறை உள்ளது என பெருமிதம் தெரிவித்த அவர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த மருத்துவமனையில் சளிக்கு பதிலாக நாய்க்கடி மருந்து கொடுத்தார்கள்.

என்பதனை விளக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என கேட்டு கொண்டார்.

Hindusthan Samachar / P YUVARAJ