தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன், பாஜக மையக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) சென்னை கமலாலயத்தில் நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், வேட்பாளர் பட்டியல்
Nainar Nagenthran Byte


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை கமலாலயத்தில் நாளை பிரதமர் மோடி தமிழகம் வருகை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், வேட்பாளர் பட்டியல் எப்பொழுது வெளியிடப்படும் என்ற கேள்விக்கு,

மத்திய அமைச்சர் நாளை பியூஷ் கோயல் சென்னை வருகிறார் அதன் பின்னர் முடிவாகும் என கூறினார்.

ஏன் காலதாமதம் ? என கேட்கப்பட்டதற்கு, காலதாமதமே இதில் கிடையாது. தாமதத்தால் ஒரு குறையும் இல்லை என தெரிவித்தார்.

பிரதமர் தமிழக வருகை ? குறித்த கேள்விக்கு, நாளை பிரதமர் தமிழகம் வருகிறார், சென்னை வந்து விட்டு பாண்டிச்சேரி செல்கிறார். அங்கிருந்து மீண்டும் சென்னை வந்து சென்னையில் இரவு தங்குகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு வழங்க திட்டம் இல்லை என கூறினார்.

மேலும் பாஜகவின் உடைய மாநில மையக்குழு மற்றும் மூத்த தலைவர்கள் பிரதமரை சந்திக்கிறோம் என பேசினார்.

திமுக பிரசார பாடல் குறித்து கேட்ட கேள்விக்கு,

திமுகவின் பிரச்சார பாடல் வெளியிட்டு இருக்கிறார்கள் மீண்டும் திராவிட மாடல் 2.0 நடக்கும் என்று சொல்கிறார். பாடல் வெளியிட்டால் மட்டும் ஆட்சி அமைக்க முடியுமா ? பாடலில் இருக்கக்கூடிய வரிகள் உண்மையாக இருக்க வேண்டும்., பழைய தேர்தல் அறிக்கையில் சொன்னதெல்லாம் நடத்தி இருக்க வேண்டும்.

நல்ல முறையில் ஆட்சி நடத்திருக்கணும் சட்டம் ஒழுங்கு நடத்தி இருக்க வேண்டும், தமிழகம் முழுவதும் கஞ்சா இல்லாமல் இருக்க வேண்டும், வரும் பாட்டை மட்டும் பாடிவிட்டால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்றால். மக்களை என்ன தான் நினைத்திரக்கிறார்கள் என்று தெரியவில்லை.

5 ஆண்டுகால மக்கள் பட்ட வேதனைக்கு, ஒரு விடிவுகாலம் தான் ஏப்ரல் 23ஆம் தேதி. எங்க பாத்தாலும் கஞ்சா பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் மத்தியில் - முதலெல்லாம் பள்ளி வளாகத்திற்கு வெளியே மிட்டாய் விற்பார்கள் இப்பொழுது கஞ்சா விற்கிறார்கள். மெத்தப்பட்ட மணி ஹெராயின் என்று விற்பனையாகிறது.

இப்போது தேர்தல் அறிக்கை ஹீரோ என்று சொல்கிறார்கள் ! இப்பொழுது உள்ள தேர்தல் அறிக்கை ஒன்றுமே சொல்லவில்லை கடந்த தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே செய்யவில்லை அதனால் தான் அவர்கள் அவர்கள் தேர்தல் அறிக்க ஹீரோ என்று சொல்கிறார்கள் நாங்கள் அந்த தேர்தல் அறிக்கையை ஜீரோ என்று சொல்கிறோம்.

தேர்தல் அறிக்கை ஹீரோயின் என்று சொல்கிறார்கள் நாங்கள் ஹெராயின் தமிழ்நாடு என்று சொல்கிறோம்.

ஆனால் பாட்டு படிக்கிறது மக்களை மென்மேலும் தமிழகத்தில் ஏமாற்றுவது என்பது நிச்சயம் நடக்காது என்று அவர் பேசினார்.

விஜய் இன்று இரண்டாவது பகுதியாக திருச்சி தெற்கின் போட்டியிடுவதற்காக விருப்பமான தாக்கல் செய்திருக்கிறார் ? என்ற கேள்விக்கு,

அது அவருடைய விருப்பம், எங்க வேண்டுமானாலும் அவர் தேர்தலில் இருக்கலாம், மக்கள் எவ்வளவு தூரம் அவருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்பதை பொறுத்து தான் அமையும் என பேசினார்.

தொடர்ந்து விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கும் மாநில தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது ? என்ற கேள்விக்கு,

விஜய்க்கு மட்டும் கேட்கிறீர்கள் தனிமனிதருக்கு இந்த தமிழ்நாட்டில் பாதுகாப்பு திமுக ஆட்சியில் இல்லை என அவர் பேசினார்.

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை எப்பொழுது வெளியிடப்படும் ? என்ற கேள்விக்கு, வெகு விரைவில் என அவர் பதிலளித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ