Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச.)
ஏடிஎம் பயன்பாட்டில் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனைகளுக்கே மட்டுமே இலவச வரம்பு இருந்த நிலையில், இனி பணமில்லாத பரிவர்த்தனைகளும் (பேலன்ஸ் சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட் போன்றவை) அந்த இலவச வரம்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால், வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தும் போது மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளும் இலவச எண்ணிக்கையில் கணக்கிடப்படும்.
இந்த இலவச வரம்பைத் தாண்டியவுடன், பணம் எடுப்பதற்கும், கணக்கு இருப்பு (பேலன்ஸ்) பார்ப்பதற்கும் தனித்தனியாக கட்டணங்கள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் முதலில் சிறியதாக தோன்றினாலும், அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்தும் மக்களுக்கு இது கூடுதல் செலவாக மாறக்கூடும்.
குறிப்பாக தினசரி அல்லது அடிக்கடி பேலன்ஸ் சரிபார்ப்பவர்கள் அதிக கட்டணத்தை சந்திக்க நேரிடும்.
எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது ஏடிஎம் பயன்பாட்டை திட்டமிட்டு பயன்படுத்துவது நல்லது.
Hindusthan Samachar / JANAKI RAM