Enter your Email Address to subscribe to our newsletters

கவுகாத்தி, 02 ஏப்ரல் (ஹி.ச.)
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மாநிலத்தில் வெறுப்பு அரசியல் முன்னெடுத்து வருகிறார் என இன்று குற்றம்சாட்டினார்.
அசாம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொண்ட இரு நாள் பயணத்தின் போது மாநிலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இடிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க பத்ருதீன் அஜ்மலின் ஏஐயூடிஎஃப் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியஒவைசி,
பத்ருதீன் அஜ்மலின் ஏஐயூடிஎஃப்-க்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நான் அசாமில் உள்ளேன். ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, மாநிலத்தில் வெறுப்பு அரசியல் தீவிரமடைந்துள்ளது.
பாஜகவின் எழுச்சியைத் தடுக்க காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. அதன் விளைவாகவே இன்று பாஜக ஆட்சியில் உள்ளது.
50,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டு, அவர்கள் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க AIUDF-க்கு ஆதரவு அளிப்பது அவசியம்.
என்று கூறினார்.
126 இடங்கள் கொண்ட அசாம் சட்டமன்றத் தேர்தலில், ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடி போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM