பிரதமர் நரேந்திர மோடி ஹனுமான் ஜெயந்தி வாழ்த்து
புதுடெல்லி, 02 ஏப்ரல் (ஹி.ச.) ஹனுமான் ஜெயந்தி என்பது ஹனுமான் பெருமான் அவதரித்த நாளை குறிக்கும் பண்டிகை. இது இந்து மாதமான சித்திரை மாதத்தில், பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும் இந்நாள், வண்ணமயமான ஊர்வல
பிரதமர் நரேந்திர மோடி ஹனுமான் ஜெயந்தி வாழ்த்து


புதுடெல்லி, 02 ஏப்ரல் (ஹி.ச.)

ஹனுமான் ஜெயந்தி என்பது ஹனுமான் பெருமான் அவதரித்த நாளை குறிக்கும் பண்டிகை.

இது இந்து மாதமான சித்திரை மாதத்தில், பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும் இந்நாள், வண்ணமயமான ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாதம் பகிர்ந்தளிப்பதன் மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஹனுமான் ஜெயந்தி பண்டிகையையொட்டி, இன்று நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையுடன் வழிபாட்டிற்கு திரண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஹனுமான் பெருமானை பக்தி, வலிமை மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாகக் குறிப்பிட்டு புகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளதாவது

ஹனுமான் பெருமான் பக்தி, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் இணையற்ற அடையாளமாகத் திகழ்கிறார்.

இந்த வல்லமை மிக்க இறைவனின் அருள், அவரது பக்தர்களுக்கு தைரியத்தையும் நேர்மறை சிந்தனையையும் வழங்கட்டும்.

அவர் மேலும் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பகிர்ந்துள்ளார்:

மனோஜவம் மாருததுல்யவேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம், வாதாத்மஜம் வானரயூதமுக்கியம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி.

இந்த ஸ்லோகம் மூலம் ஹனுமான் பெருமானின் நற்பண்புகள் மற்றும் மகத்துவத்தை பிரதமர் சிறப்பித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM