Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 02 ஏப்ரல் (ஹி.ச.)
2026-ஆம் ஆண்டிற்கான கேரள சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் எல்டிஎஃப், யுடிஎஃப் மற்றும் என்டிஏ என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மார்ச் 31 அன்று, கேரள பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கேரளத்தை உலகின் முக்கியமான சுற்றுலாத் தலமாக உருவாக்குவதாகவும், திருவனந்தபுரத்தை தகவல் தொழில்நுட்பத் தலைநகராகவும், கொச்சியை இந்தியாவின் கப்பல் கட்டுமான மையமாகவும், கோழிக்கோட்டை சுகாதாரம் மற்றும் மருத்துவ தலைநகராகவும், மேம்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இன்று மாலை நடைபெறவுள்ள
மேரா பூத் சப்சே மஸ்பூத் சம்வாத் – கேரளம் நிகழ்ச்சியின் மூலம், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
இந்த சூழலில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
கேரளம் முழுவதும் உள்ள மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை உற்சாகமாக ஆதரித்து வருகின்றனர். எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரு கூட்டணிகளின் வெற்று வாக்குறுதிகளை அவர்கள் நன்கு புரிந்துகொண்டுவிட்டனர்.
இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ள 'மேரா பூத் சப்சே மஸ்பூத் சம்வாத் – கேரளம்' நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b