Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா வேட்புமனுத்தாக்கல் செய்தார்
சென்னை, வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சு.கீதாவிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
முன்னதாக கையில் திராசுடன் தமிழகத்தில் நடக்கும் அத்திமீறல்களுக்கும், பெண்களுக்கான பாதுகாப்பின்மைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கிற்கும் நீதி கேட்டும் கையில் திராசுடன் ஊர்வலமாக வந்தார்.
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பாக ஆர்.டி. சேகர், நாம் தமிழர் சார்பாக வெற்றிச் செல்வன், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட உள்ளனர்
பாமக பொருளாளர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி என் டி ஏ வேட்பாளர் திலகபாமா செய்தியாளர் சந்திப்பில் கூறியது,
இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒத்துழைப்போடு பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன
இந்த தொகுதியில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மக்கள் விரோத அரசு நடந்து கொண்டு வருகிறது.
அதை தூக்கி எறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் இரண்டு முறை திமுக ஆட்சி அமைத்து வருகிறது அடிதட்டு மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் அடித்தட்டு மக்களுக்கு தேவையான எந்த வசதிகளையும் செய்யவில்லை
மக்கள் சட்டமன்ற உறுப்பினரை இதுவரை பார்த்ததில்லை என்ன சொல்லக்கூடிய நிலை தான் உள்ளது , அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம் முழுவதும் பேராதரவுடன் வெற்றி பெறும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் அரியணை ஏறுவார் , பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பொறுத்த வரை இதுவரை பெண் வேட்பாளர்கள் யாரும் போட்டிட்டதில்லை நான்தான் முதல் பெண் வேட்பாளராக அறிமுகம் ஆகிறேன்
இந்த பகுதியில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் மிக அதிகம் போதை பொருட்கள் பாலியல் வன்கொடுமை கொலை கொள்ளை சட்ட ஒழுங்கு சீர்கேடு அதுமட்டுமில்லாத பெரம்பூர் என்றால் அனைவருக்கும் இரும்பு ஞாபகத்துக்கு வரும் ஆனால் பெரம்பூர் பகுதி என்பது மூங்கில் காடுகள் இருந்த ஒரு பகுதி ஆனால் அவை ஏதும் மக்களுக்கு நினைவுக்கு வருவதில்லை கொடுங்கையூர் குப்பை மேடு மட்டும்தான் நினைவுக்கு வருகிறது,
இந்தப் பகுதியை மீட்டெடுத்து மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வகையில் இருக்கும் ஒரு பகுதியாக இந்த பகுதியை மாற்றுவோம் என மக்களுக்கு உறுதிமொழி அளிக்கிறோம்
எங்களுக்கு கிடைத்த இந்த வரவேற்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது இது வேண்டாம் என்று மக்கள் நினைப்பதால் இந்த வரவேற்பு எங்களுக்கு கிடைத்துள்ளது , மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சி அமைத்து அவர்களிடம் தமிழகத்தை கொடுத்தால் தமிழகத்தை கூறு போட்டு விற்பனை செய்து விடுவார்கள் அதனை சந்திக்க மக்கள் தயாராக இல்லை
தீமைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் போட்டியில் நாங்கள் இருக்கிறோம். , மக்கள் விரும்பும் நபராக நான் மாறுவேன்
இந்த தொகுதியில் மக்களுக்கான அனைத்து வசதிகளும் கிடைத்து மக்கள் நிறைவாக வாழ்கிறார்கள் என்றால் மட்டுமே நான் இந்த தொகுதியினை ஸ்டார் தொகுதி என கருதுவேன் , யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் வேட்பாளராக நிற்கலாம் ஆனால் மக்கள் தன் தேர்ந்தெடுக்க வேண்டும்
எனக்கு மக்களுக்கு எதிரான ஆட்சி அகற்றப்பட வேண்டும் , நான் வேட்டு மணி தாக்கல் செய்ய வருகை அளிக்கும் பொழுது ஒரு தராசுடன் வந்து நீதி கேட்டு வந்துள்ளோம் இங்கு சமூக நீதி இல்லை போதை வசதிகள் இல்ல தலைவிகளின் வாழ்வினை அளித்து வருகிறது , ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் சேர்த்து நீதி கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் , ஒடுக்கப்பட்ட தலைவர்களின் மக்களாக யாருமே வரக்கூடாது என ஒரு அரசு முடிவு எடுக்குமானால் அதனை அழித்தொழிக்க வேண்டும்
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என சட்டம் உள்ளது அதனால் விஜய் இரண்டு தொகுதிகளில் தாக்கல் செய்கிறார் அதில் சொல்ல கருத்துக்கள் ஏதும் இல்லை
திமுக விடம் ஒரு நல்ல வித்தை உள்ளது அவர்களுக்கு பொய்யனை கூட உண்மை போல் பேசுவது மிக அருமையாக வரும் , அந்த வகையில் 24 கூட்டணி உள்ளது என கூறுகிறார்கள் பயந்து தான் இத்தனை நபர்களை அழைத்துள்ளீர்கள் அறிவாலத்தை யாராலும் கடக்க கூட முடியவில்லை அனைவரையும் அழைத்து கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறீர்கள்
திமுக எண்ணிக்கையை மெருகேற்றி பேசி வருகிறது நான் கூட்டணியின் தரத்தினை பற்றி யோசிக்கிறேன்
இந்திய கூட்டணி மக்கள் விரோத ஆட்சி தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கூடியுள்ளது தேர்தலில் தொகுதிகள் வழங்கப்படுகிறது என யாரும் இணையவில்லை , இதுதான் பலமான கூட்டணி , பலமான கூட்டணி எண்ணிக்கையில் தெரியும் என கூறுவது இனிமேல் மக்கள் நம்ப மாட்டார்கள்
இரண்டு முறை மக்கள் தேர்ந்தெடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆட்சியில் அமர வைத்துள்ளனர் மக்கள் விரும்பும் ஆட்சியின் ஏ டீம் அல்லது பீ டீமாக இருந்தால் உங்களுக்க என்ன வந்தது , மக்கள் வினோத் ஆட்சியின் துணை அணிகளாக தான் இருக்கக் கூடாது
மக்கள் விரும்பும் ஆட்சியில் தான் நாம் கூட்டணியில் இருக்கிறோம் மக்கள் விரோத ஆட்சியில் ஒரு நாளும் இருந்ததில்லை
திமுக கூட்டணி இருக்கு கருத்துக்கள் வைக்க தெரியாது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்று அவர்களால் முடியவில்லை. மீண்டும் வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர் அதையும் நிறைவேற்ற வில்லை என்றால் அதற்கு காரணமாக மற்றவர்களை குறை கூறுகிறார்கள் , ஆனால் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு தேவையானவையை முன்னெடுத்து வைத்து வருகிறார்கள்
இந்திய கூட்டணி அடிதட்டு மக்களுக்கு மீன் கொடுக்காமல் மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுக்கும் ஆட்சியை வழங்கியுள்ளது அந்த ஆட்சி அமைய வேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றொரு கூட்டணியில் இணைந்துள்ளார் இதன் காரணமாக தேர்தல் வாக்குகள் சிதராதா என கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தலில் அது தொடர்பாக காண்போம் என குறிப்பிட்டார்
திலகபாமா அன்பால் நிறைந்தவள் சுயமரியாதை மண்ணுக்கு சொந்தக்காரி , மக்களுக்கானவளாக நான் மாறுகிற பொழுது மக்களே தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் அதை நோக்கி தான் எங்களின் பயணம் உள்ளது
மத்திய அரசும் மாநில அரசும் சண்டையில் மக்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியவில்லை எந்தவிதமான சலுகைகளும் மக்களுக்கு சென்றடைவதில்லை , திமுகவின் மாநில அரசு ஒழுங்காக நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்களுக்கு அனைத்தையும் கொடுத்திருக்கலாம் ஒன்றிய அரசு மாநில அரசும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆட்சியை கொண்டு சேர்க்க த்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி வெல்ல வேண்டும் பிரதமர் மோடி அவர்களும் எடப்பாடி யார் அவர்களும் எங்களின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் இணைந்து மக்களுக்கான களத்தினை காண்பார்கள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசின் மீது திமுக அரசு குற்றங்களை செலுத்தி வருகிறது , நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம்.
மக்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு சமூகநீதி மற்றும் அவர்களுக்கான வாழ்வியல் முன்னேற்றம் எங்களால் கொடுக்க முடியும் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ