சேலத்தில் முன் பகையால் அண்ணன் வீட்டை சேதப்படுத்திய சகோதரர்கள்
சேலம், 02 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை, சுண்டெலி பெருமாள் கோவில் அருகே வசித்து வரும் அய்யாவு – கஸ்தூரி தம்பதியினருக்கு மோகன்ராஜ், ஜெயக்குமார், அருண் பிரசாத் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களுக்
முன்பகை


சேலம், 02 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை, சுண்டெலி பெருமாள் கோவில் அருகே வசித்து வரும் அய்யாவு – கஸ்தூரி தம்பதியினருக்கு மோகன்ராஜ், ஜெயக்குமார், அருண் பிரசாத் என மூன்று மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக, 2021ஆம் ஆண்டு நிலப் பாகப்பிரிவினை நடைபெற்றது.

இந்நிலையில், மோகன்ராஜ் தனது பகுதியான நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை நேற்று மேற்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது சகோதரர்கள் ஜெயக்குமார், அருண் பிரசாத் ஆகியோர் ஆதரவாளர்களுடன் சேர்ந்து வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், வீட்டின் கேட் மற்றும் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்துள்ளனர். முகத்தை மூடியபடி சிசிடிவி கேமராக்களை நொறுக்கும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளதால், பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam