Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 02 ஏப்ரல் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் சில காலமாக காதலித்து வந்தனர். இவர்களின் உறவு பற்றி இரு குடும்பங்களும் அறிந்த நிலையில், திருமணத்திற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தின் எதிர்ப்பால் மனமுடைந்த காதல் ஜோடி, தங்களது வாழ்க்கையை முடிக்க முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று அவர்கள் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாகிராத் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன் இருவரும் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் தற்கொலைக்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், குடும்ப எதிர்ப்பால் காதல் ஜோடிகள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM