சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு
திண்டுக்கல், 02 ஏப்ரல் (ஹி.ச) வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாகத் தமிழ்நாடு பிராமண சமாஜம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இத
Brahmin


திண்டுக்கல், 02 ஏப்ரல் (ஹி.ச)

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதாகத் தமிழ்நாடு பிராமண சமாஜம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் ஹரிமுத்து மற்றும் சங்க நிர்வாகிகள், திராவிடக் கட்சிகள் சனாதன தர்மத்திற்கு எதிராகவும், பிராமண சமூகத்திற்கு எதிராகவும் செயல்படுவதால் அவர்களைப் தவிர்ப்பதாக தெரிவித்தனர். தேச நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

மத்திய அரசுடன் இணக்கமான மாநில அரசு அமைந்தால் மட்டுமே தமிழகத்திற்குத் தேவையான நிதி மற்றும் திட்டங்களைப் பெற முடியும் என்றும், அதற்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகச் சமாஜத்தின் நிர்வாகிகள் களப்பணியாற்றுவார்கள் என்றும் உறுதி அளித்தனர்.

திமுக அரசின் கடந்த காலக் கோயில் குடமுழுக்கு மற்றும் பராமரிப்புப் பணிகளை வரவேற்றாலும், கொள்கை ரீதியாகத் தேசிய நீரோட்டத்துடன் இணைந்திருக்கவே விரும்புவதாக அவர்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்.

Hindusthan Samachar / ANANDHAN