தென்காசி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.04 கோடி பணம் பறிமுதல்
தென்காசி, 02 ஏப்ரல் (ஹி.ச.) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஆங்காங்கே வாகன தணிக்கையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களிடம் அந்த பணமானது பறிமுதல் செய்யப்ப
Tenkasi Collector Office


தென்காசி, 02 ஏப்ரல் (ஹி.ச.)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஆங்காங்கே வாகன தணிக்கையானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் செல்லும் நபர்களிடம் அந்த பணமானது பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் மார்ச் 15-ஆம் தேதி முதல் இன்று வரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஒரு ரூ.1கோடியே 4 லட்சத்து 8 ஆயிரத்தி 332 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக

அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.8 லட்சத்து 35 ஆயிரத்தி 250 ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் 45 சிறப்பு பறக்கும் படை குழுவினர் மற்றும் 45 நிலையான பறக்கும் படை குழுவினர் என 90 பறக்கும் படை குழுவினர்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் உரிய ஆவணங்களோடு தங்களது பணத்தை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்கு எடுத்து செல்பவர்கள் உரிய காரணங்களை கூறி ஒப்புதல் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லலாம் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN