கனிமொழியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகள்..! வாகனத்தை சல்லடை போட்டு அலசியதால் பரபரப்பு..!
சிவகங்கை, 02 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி
கனிமொழி


சிவகங்கை, 02 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி வருகை தந்துள்ளார்.

இதற்கிடையில், தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர். முருகானந்தம் (கூட்டுறவு சார் பதிவாளர்), அறிவழகன் (சார்பு ஆய்வாளர்) தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையின் போது, கனிமொழி தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கி ஒத்துழைப்பு வழங்கி காத்திருந்தார். பின்னர் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை செய்ததில் எந்த வித தவறும் இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, கனிமொழி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam