என்னை எம்.எல்.ஏ -வாக்கினால்....வாக்குறுதிகளை அள்ளி வீசிய சௌமியா அன்புமணி
தருமபுரி, 02 ஏப்ரல் (ஹி.ச.) தருமபுரி சட்டமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கடந்த சில தினங்களாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதோடு அவர்களோடு சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலைய
சௌமியா


தருமபுரி, 02 ஏப்ரல் (ஹி.ச.)

தருமபுரி சட்டமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கடந்த சில தினங்களாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதோடு அவர்களோடு சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் வாழ்த்துக்களை பெற்றார். அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் மேல தளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் குடிநீர்,

சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம்

கொடுப்பதாகவும், மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீர்

மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அயராது பாடுபடுவேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க அயராது பாடுபடுவேன் எனவும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வராக்கி தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், கூட்டணி சின்னத்தில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து

வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam