துணைவேந்தர் நியமன அதிகாரம் கல்வித் தரம் பாதிக்காது – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச) சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள துணைவேந்தர் நியமன விவகாரத்தில், மாநில அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்து முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகார
High court


சென்னை, 02 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள துணைவேந்தர் நியமன விவகாரத்தில், மாநில அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்து முக்கிய விளக்கங்களை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், துணைவேந்தர் நியமன அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டாலும், கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன், சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தி தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய அரசு, இதை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களைச் சார்ந்த சட்டங்களை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் மேலதிக விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ