ஹைதராபாதை உலக ஐடி மையமாக மாற்றியவர் சந்திரபாபு நாயுடு - தெலுங்கானா பாஜக எம்.பி. அரவிந்த்
அமராவதி 20 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நில
A


அமராவதி 20 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான நாரா சந்திரபாபு நாயுடு இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதி பாஜக எம்.பி. தர்மபுரி அரவிந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

1990களிலேயே தெளிவான தூரநோக்குடன் சந்திரபாபு செயல்பட்டார்.

மாநிலத்தில் பொறியியல் கல்வி வாய்ப்புகளை திட்டமிட்டு விரிவுபடுத்தி, இளைஞர்களை உலக ஐடி துறைக்கு அறிமுகப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஹைடெக் சிட்டி போன்ற முக்கிய திட்டங்கள் மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்த்து, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் கூறினார்.

சந்திரபாபுவின் தலைமையும், முன்னோக்குச் சிந்தனையும் காரணமாகவே ஹைதராபாத் இன்று உலகளாவிய ஐடி மையமாக வளர்ந்துள்ளது என்று அரவிந்த் பாராட்டினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA